/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மணல் அரித்த ரோட்டில் பயணிக்க மக்கள் அச்சம்
/
மணல் அரித்த ரோட்டில் பயணிக்க மக்கள் அச்சம்
ADDED : பிப் 03, 2025 05:41 AM
கொட்டாம்பட்டி: வலைச்சேரிப்பட்டி ரோட்டோரம் மழை தண்ணீர் செல்லும் கால்வாயினுள் அமைத்துள்ள கிடைமட்ட உறிஞ்சு குழியினால் ரோட்டின் கீழ் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
வலைச்சேரி பட்டியில் இருந்து பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு செல்லும் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி குடியிருப்பு வாசிகள், விவசாய நிலங்களுக்கு செல்வோருக்காக ரோடு உள்ளது. இந்த ரோடு அருகே பெருமாள் குளம், முழம்பு கண்மாய்களுக்கு மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்லும் கால்வாயினுள் பிள்ளையார் கோயில் அருகே ரூ.1.27 லட்சத்தில் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைத்தனர். அதனால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டு ரோட்டோரம் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது : தண்ணீர் செல்லும் வழியில் கிடைமட்ட உறிஞ்சுகுழி அமைத்துள்ளதால் கால்வாயில் திசை மாறி ரோட்டின் கீழ் பகுதியில் தண்ணீர் மோதிச் செல்வதால் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மண் அரிப்பை தடுக்க அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் சரியாகவில்லை என்றனர்.
ஒன்றிய பொறியாளர் சரவணன் கூறுகையில், ''ஓரிரு நாளில் நேரில் ஆய்வு செய்து மண் அரிப்பை தடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

