/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உடைந்த தொட்டியால் உயிர் பயத்தில் மக்கள்
/
உடைந்த தொட்டியால் உயிர் பயத்தில் மக்கள்
ADDED : மார் 27, 2025 04:56 AM

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி - - காரைக்குடி ரோட்டின் நடுவில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களில் காற்று வெளியேறவும், பழுது நீக்கவும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அருகே ஒன்றிய அலுவலகம், உதினிப்பட்டி, சொக்கலிங்கபுரத்திற்கு ரோடு செல்கிறது. தொட்டி திறந்து கிடப்பதுடன், சிதிலமடைந்தும் உள்ளது. ரோட்டில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி தொட்டியினுள் விழுவதால் தினமும் விபத்து ஏற்படுகிறது. விபரீதம் நிகழும் முன் தொட்டியை பழுது நீக்குவதுடன், தொட்டி குறித்த அறிவிப்பு பலகையை ஒளிரும் ஸ்டிக்கர்களுடன் அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.