/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கவுன்சிலர் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற மக்கள்
/
கவுன்சிலர் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற மக்கள்
கவுன்சிலர் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற மக்கள்
கவுன்சிலர் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்ற மக்கள்
ADDED : செப் 21, 2025 04:49 AM
மதுரை: மதுரை செல்லுார் 23வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு எட்டப்படாததால் கவுன்சிலர் அலுவலகத்திற்கு மக்கள் பூட்டுடன் வந்து போராட்டம் நடத்தினர்.
அந்நேரத்தில் மா.கம்யூ., கவுன்சிலர் குமரவேலு இல்லை. பின் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கழிவுநீர் இயந்திரங்கள் வந்த பிறகே கலைந்து சென்றனர்.
கவுன்சிலர் குமரவேலு கூறியதாவது: சில கட்சியினர் மக்களை துாண்டி விடுகின்றனர். மாநகராட்சியின் 24,27,29வது வார்டு களிலும் இப்பிரச்னை உள்ளது. மணவாள நகர், இந்திராநகர் பகுதிகள் பள்ளமான பகுதிகள் என்பதால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது.
தத்தனேரியிலிருந்து குலமங்கலம் மெயின்ரோடு வழி செல்லுார் பம்பிங் ஸ்டேஷனிற்கு செல்லுமாறு தனியாக குழாய் அமைக்க வேண்டும்.
மாநகராட்சியில் கழிவுநீர் அள்ளும் இயந்திரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் எளிதில் பழுதடைகின்றன என்றார்.