/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விழாவுக்கு விதைநெல் வழங்கிய மக்கள்
/
விழாவுக்கு விதைநெல் வழங்கிய மக்கள்
ADDED : செப் 23, 2024 06:17 AM
மேலுார் : திருவாதவூரில் மழை வேண்டி கொண்டாடும் புருஷாமிருகத்திற்கு கருப்பு சாத்து நிகழ்ச்சி மற்றும் மதநல்லிணக்க விழாவுக்காக பொதுமக்களிடம் விதைப்பு (நெல்) வசூலிக்கப்பட்டது.
இக்கிராமத்தில் உள்ள சோழப்பேரேறி கண்மாயில் புருஷாமிருகத்திற்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் கருப்பு சாத்தும் நிகழ்ச்சி மற்றும் மத நல்லிணக்க விழா நடைபெறும்.
இதற்காக திருவாதவூர் கிராமத்தில் தொண்டூழியம் புரிபவர்கள் தப்பு தாளத்துடன் உலகுபிச்சன்பட்டி, பலையூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு நேற்று வீடு வீடாகச் சென்று மக்களிடம் விதைப்பு (நெல்) வசூலித்தனர்.
மக்களிடம் வசூலித்த நெல்லை கிராமத்து சார்பில் விற்று அதில் வரும் வருவாயை வைத்து கிடா உட்பட பூஜை பொருட்கள் வாங்குவர்.
செப். 28 ல் கிராம மந்தையில் இருந்து பொதுமக்கள் ஊர்வலமாக செல்வர். தேங்காயை நெருப்பில் சுட்டு மாவு போல் அரைத்து புருஷாமிருகத்திற்கு கருப்பு சாத்துவர்.
செப்.29 ல் கிராமம் சார்பில் வாங்கிய கிடாவை பலி கொடுத்து கறியை ஹிந்துக்கள் மந்தையிலும், முஸ்லிம்கள் பள்ளிவாசலிலும் கந்திரி கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து பொங்கல் வைப்பர்.
மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக வாழ இவ் விழாவை நடத்துவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.