/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
21 நாட்களாக இரவில் தவிக்கும் மக்கள்
/
21 நாட்களாக இரவில் தவிக்கும் மக்கள்
ADDED : செப் 22, 2024 03:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : செம்மனிபட்டியில் இருந்து சுமதிபுரம் வழியாக கரையிபட்டி செல்லும் ரோட்டோரத்தில் தெருவிளக்குகளுக்கு தனியாக மின்கம்பம் ஊன்றி மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு முன் வீசிய பலத்த காற்றில் மின் கம்பிகள் கழன்று ரோட்டில் கிடக்கின்றன. இதனால் மின்சப்ளை துண்டிக்கப்பட்டு தெருவிளக்குகள் எரியாமல் இருட்டாக உள்ளது. அதனால் மக்கள் இரவில் வெளியே செல்ல தயங்கி வீட்டினுள் முடங்கியுள்ளனர்.
மின்வாரிய லைன்மேன் பாபு கூறுகையில், ''அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கம்பங்கள் இல்லாததால் மின் இணைப்பு கொடுக்க தாமதாகிறது'' என்றார்.