/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்கள் கொதிப்பு : மதுக்கடைகள் அடைப்பு
/
மக்கள் கொதிப்பு : மதுக்கடைகள் அடைப்பு
ADDED : மார் 17, 2024 01:03 AM
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே குராயூர் ஊராட்சிக்கும் கே. சென்னம்பட்டிக்கும் இடையில் கள்ளிக்குடி - காரியாபட்டி ரோட்டில் மதுக்கடை 2 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதை கண்டித்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட மக்கள் குராயூர், சென்னம்பட்டி கிராமல்களில் இருந்து கள்ளிக்குடிக்கு கிளம்பினர்.
இன்ஸ்பெக்டர் லட்சுமிலதா, எஸ்.ஐ.,க்கள் ஜெயக்குமார், மணிமொழி தடுத்தனர்.
தாசில்தார் செந்தாமரை பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தற்காலிகமாக கடை மூடப்பட்டது.
குராயூர் ஊராட்சி தலைவர் வீரணன், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி, அ.ம.மு.க., மாணவர் அணி செயலாளர் ஜீவிதா நாச்சியார், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் சிவலிங்கம், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன், ஒன்றிய நிர்வாகிகள் ஆறுமுகம், வையத்துறை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலுார்: திருவாதவூர் ரோட்டில் திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டதால் மூடப்பட்டது.
இக் கடை ஏற்கனவே காந்திநகர்,  பழையசுக்காம்பட்டி பகுதிகளில் திறக்கப்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.  தாசில்தார் முத்துபாண்டியன், நகராட்சி தலைவர் முகமது யாசின், துணைத் தலைவர் இளஞ்செழியன், கவுன்சிலர் மனோகரன், பா.ஜ., பொதுசெயலாளர் கண்ணன், நகர் தலைவர் சேவுகமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

