ADDED : டிச 05, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தல்லாகுளம் கமலாநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பையா உட்பட அப்பகுதியினர் கலெக்டர் பிரவீன்குமாரிடம் மனு கொடுத்தனர்.
அதில், ''மேற்கண்ட பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வருவாய்த்துறை சார்பில் இணையவசதி பட்டா வழங்க கோரினோம். எங்களில் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அந்த பட்டா வழங்கப்பட்டது. மீதியுள்ள 20 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படாதது ஏனென்று தெரியவில்லை. தினக்கூலி பணியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

