ADDED : மார் 06, 2024 05:34 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம், : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் சித்தாலை கிராமத்தின் ஆதிதிராவிடர் காலனி வீடுகளுக்கு 6 மாதத்திற்கு மேலாக துர்நாற்றத்துடன் கூடிய குடிநீர் வினியோகிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதை கண்டித்து 20க்கும் மேற்பட்ட பெண்கள் இ.கம்யூ., கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம் தலைமையில் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் சமரசத்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
