/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வீஸ் ரோடு கேட்டு மக்கள் போராட்டம்
/
சர்வீஸ் ரோடு கேட்டு மக்கள் போராட்டம்
ADDED : பிப் 10, 2025 04:49 AM
அலங்காநல்லுார்: வாடிப்பட்டி- தாமரைப்பட்டி இடையே அவுட்டர் ரிங் ரோடு பணிகள் அலங்காநல்லுார் பகுதி வழியாக நடக்கிறது.
இந்நிலையில் சின்ன இலந்தைகுளம் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைத்தால் அலங்காநல்லுார் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும், ஜல்லிக்கட்டு மைதானத்திற்கும், இப்பகுதி விளையாட்டு மைதானத்திற்கும், விவசாய பணிகளுக்கும் எளிதில் சென்றுவரலாம். 20 கிராமங்கள் பயன்பெறும் என கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
நேற்று சின்ன இலந்தைகுளத்தில் இதனை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் துவங்கினர். மக்களின் கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நிராகரித்து பதில் அளித்துள்ளதைக் கூறி, போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்தவர்கள் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி கலைந்தனர்.

