/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரிக்கைகளை அரசு ஏற்றதால் 'பெரா' போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
/
கோரிக்கைகளை அரசு ஏற்றதால் 'பெரா' போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கோரிக்கைகளை அரசு ஏற்றதால் 'பெரா' போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கோரிக்கைகளை அரசு ஏற்றதால் 'பெரா' போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
ADDED : நவ 20, 2025 08:42 AM
மதுரை: கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று அரசாணைகளை உடனே வழங்குவதாக அரசு உறுதியளித்ததால் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) நடத்திய எஸ்.ஐ.ஆர்., பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முருகையன், குமார், பூபதி, அண்ணாகுபேரன், ரவி கூறியிருப்பதாவது: பெரா அமைப்பு சார்பில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் வழங்கப்பட்ட அதிகப்பணி அழுத்தத்தை களையவும், இப்பணிக்கு கால அவகாசம் வழங்கவும் வலியுறுத்தி எஸ்.ஐ.ஆர்., பணிகள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா, நிர்வாக ஆணையர் சாய்குமார் ஆகியோர், 'பெரா' அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி, அனைத்து கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதியளித்தனர். எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொண்டனர்.
போராட்டம் துவங்கியதுமே பி.எல்.ஓ., கண்காணிப்பாளர் உட்பட பலரது ஊக்க ஊதியத்தை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு கூடுதல் பணியிடம் ஏற்படுத்தவும் விரைவில் ஆணை வெளியிடப்பட உள்ளது.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவி செய்ய கூடுதல் பணியாளர்கள் நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு ஆய்வுக் கூட்டங்கள், பணிபார்த்தல் தவிர்க்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு கூடுதல் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் களப்பணிக்கான அவகாசத்தை மேலும் 30 நாட்களுக்கு உயர்த்திட இந்திய தேர்தல் ஆணையரிடம் ஆலோசனை பெற்று ஆணை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இதனடிப்படையில் அனைத்து மாநில நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்களின் ஆலோசனைக்குப் பின், மேற்கண்ட போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

