/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதிய வாகனத்தில் பெருமாள் புறப்பாடு
/
புதிய வாகனத்தில் பெருமாள் புறப்பாடு
ADDED : டிச 20, 2024 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் மகாலட்சுமி நெசவாளர் காலனி வர சித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஸ்ரீகாந்த்-லதா தம்பதியினர் புதிய அனுமன் வாகனம் உபயமாக வழங்கினர்.
புதிய வாகனத்திற்கு பூஜை தீபாராதனை நடந்தது. உற்ஸவர் வரதராஜ பெருமாளுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து ராமபிரான் அலங்காரமாகி புதிய அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார். நகரின் முக்கிய வீதிகளில் சுவாமி புறப்பாடு நடந்தது.