/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விசாரணைக்கு போலி அழைப்பாணை குறைதீர் கூட்டத்தில் மனு
/
விசாரணைக்கு போலி அழைப்பாணை குறைதீர் கூட்டத்தில் மனு
விசாரணைக்கு போலி அழைப்பாணை குறைதீர் கூட்டத்தில் மனு
விசாரணைக்கு போலி அழைப்பாணை குறைதீர் கூட்டத்தில் மனு
ADDED : ஜூலை 08, 2025 01:31 AM
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன் குமார் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூகநல துணை கலெக்டர் கார்த்திகாயினி உட்பட பலர் பங்கேற்றனர்.
தெற்கு தாலுகா நல்லுாரைச் சேர்ந்த பாலமுருகன் அளித்த மனுவில், ''புதுக்குளம், புலிச்சிக்குளம் கண்மாய்களில் சட்டவிரோதமாக செம்மண் கடத்துகின்றனர். அதை தடுக்க ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தேன். சட்டநடவடிக்கைக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் போலி அழைப்பாணை அனுப்பியுள்ளனர். என் உயிருக்கு ஆபத்துள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
அகிம்சாபுரம் சமூகஆர்வலர் நாகேஸ்வரன் அளித்த மனுவில், ''ரோட்டில் நடந்து செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் நடக்கின்றனர். அவர்களின் நலன்கருதி ஆய்வு செய்து தேவையான பேரிகார்ட் வசதியை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சியில் எத்தனை வார்டுகளில் கழிப்பறை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். பல வார்டுகளில், செல்லுார், நரிமேடு, ஆலங்குளம், மீனாட்சிபுரம் பகுதிகளில் இலவச கழிப்பறைகள் இருப்பதாக தெரியவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகள்  சங்க மாவட்ட செயலாளர் கதிரேசன் மனுவில், ''வெள்ளலுாரில் கிளை நுாலகத்திற்கு 1993 ல் கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இது தற்போது பழுதடைந்து, மழைநீர் இறங்கி மோசமாக உள்ளது. பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

