/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கலெக்டரிடம் வலியுறுத்தல்
/
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கலெக்டரிடம் வலியுறுத்தல்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கலெக்டரிடம் வலியுறுத்தல்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கலெக்டரிடம் வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2025 07:41 AM
மதுரை: மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது.
டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் கார்த்திகாயினி உட்பட பலர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கலெக்டர் மனுக்களைப் பெற்றார். பின்னர் திரளான பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்குழு சார்பில் கண்ணன் தலைமையில் அளித்த மனுவில், ''2026 ஜன.15ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அவனியாபுரம் கிராமம் மற்றும் அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டிக்கு அனுமதி வழங்க வேண்டும்'' என தெரிவித்துள்ளனர்.
வலைச்சேரிபட்டி சரவணன் அளித்த மனுவில், ''கொட்டாம்பட்டியில் இருந்த பழைய பஸ்ஸ்டாண்டை இடித்துவிட்டு ரூ.5.5 கோடியில் புதிதாக பஸ்ஸ்டாண்ட் கட்டி காணொலியில் திறக்கப்பட்டது. நான்கு மாதங்களாகியும் இங்குள்ள 26 வணிகவளாக கடைகள் காட்சிப் பொருளாகவே உள்ளன. இக்கடைகள் முன் கால்நடைகள் தங்கும் இடமாக மாறியும், சமூகவிரோதிகள் கொண்டாட்டத்திற்கான இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த கடைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

