நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உசிலம்பட்டியில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் ஏட்டு முத்துக்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பொன்வண்ணன் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தற்போது அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
அவரது மனைவி ரித்திகா,கலெக்டர் சங்கீதாவிடம் மனு அளித்தார். அதில், சிகிச்சை பெற்று வரும் எனது கணவரை சந்திக்க போலீசார் அனுமதி மறுக்கின்றனர். சிறைத்துறையில் அனுமதி பெற்ற பின்னும் சந்திக்க விடாமல் தடுக்கின்றனர். அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

