/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உண்ணாவிரதம் அனுமதி கோரி போலீசாரிடம் மனு
/
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உண்ணாவிரதம் அனுமதி கோரி போலீசாரிடம் மனு
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உண்ணாவிரதம் அனுமதி கோரி போலீசாரிடம் மனு
தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உண்ணாவிரதம் அனுமதி கோரி போலீசாரிடம் மனு
ADDED : டிச 08, 2025 06:08 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றகோரி பொதுமக்கள் சார்பில்
உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் பிரபு போலீஸ் ஸ்டேஷனில் மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற பல்வேறு கட்டத்தில், பல்வேறு வகையில் கிராம மக்கள் போராடி வருகிறோம். இம்மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் எமது முன்னோர் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர் என்ற தகவலை செவிவழிச் செய்தியாக அறிந்திருக்கிறோம். பல நுாறு ஆண்டுகள் மரபான எங்கள் வழிபாட்டு உரிமையில் ஒன்றான கார்த்திகை தீபம் மலை உச்சி தீபத்துாணில் ஏற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இறந்து போன மூதாதையரின் ஆன்மா சாந்தியடைய, மலையில் மோட்ச தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தின் மீது தற்காலிகமாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. சமீபத்தில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றும்படி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. கோயில் நிர்வாகம் ஏற்றவில்லை. இது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டு கனவு நனவாகும் சூழலில், கைவிட்டுப் போனதை அபசகுனமாக கருதுகிறோம். எங்களின் நுாறாண்டு வழிபாட்டு மரபு உரிமையான மலை உச்சி தீபத்துாணில் உடனே தீபம் ஏற்ற வேண்டும். இக் கோரிக்கையை முன்வைத்து வைத்து, டிச. 9ல் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே அறவழியில் ஊர் பொதுமக்கள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்துள்ளோம்.
போராட்டம், பொதுக்கூட்டத்திற்கு போலீசாரால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறோம். இதில் உள்ளூர் மக்கள் 100 பேர் பங்கேற்பர். இதற்கு சாமியானா பந்தல் அமைக்கவும், மைக், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

