UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:08 PM
மேலுார்: மேலுார் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளை சுத்தப்படுத்த ஜெய் ஷீரடி சாய் மேன்பவர் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் 80 பேர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு நகராட்சி வழங்கும் சம்பளத்தை முழுமையாக வழங்காமல் ஒப்பந்ததாரர் ரவி குறைத்து கொடுப்பதால் அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். சம்பளம் மற்றும் இ.எஸ்.ஐ., இ.பி.எப்., வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் துப்பரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கத்தினர் மாவட்ட அமைப்பாளர் செல்வம் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று (அக்.,2) நகராட்சி கமிஷனரை சந்தித்து 11 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து நிறைவேறிய பிறகு வேலைக்கு செல்வது என முடிவானதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
