/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற மதுரை கலெக்டரிடம் குவியும் மனுக்கள்
/
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற மதுரை கலெக்டரிடம் குவியும் மனுக்கள்
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற மதுரை கலெக்டரிடம் குவியும் மனுக்கள்
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபமேற்ற மதுரை கலெக்டரிடம் குவியும் மனுக்கள்
ADDED : டிச 09, 2025 03:47 AM

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, பொதுமக்கள், ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகனிடம், 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் அளித்த மனுவில், 'மன்னர்கள் காலத்திலேயே தீபத்துாணில் தீபம் ஏற்றிய வழக்கம் இருந்தது. இந்த பாரம்பரியத்தை காக்க மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்.
மதுரை கலெக்டர் சமய நல்லிணக்கத்தை விரும்பும் மக்களின் குரலாய், உயர் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட தலைவர் சுரேஷ் அளித்த மனுவில், 'உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஹிந்து மத சடங்குகளை அரசு கேள்விக்குறியாக்கி உள்ளது. இயற்கைக்கு எதிராக மோட்ச தீபம் ஏற்றுவதால் ஆட்சியாளர்களுக்கு நல்லதில்லை' என தெரிவித்துள்ளனர்.
இதே போல, வைகை நதி மக்கள் இயக்கம், சுதேசி சமூகநல பண்பாட்டு இயக்கம், வெள்ளாளர் முன்னேற்ற சங்கம், ஹார்விபட்டி தொழிலாளர் முன்னேற்ற சங்கம், அகில இந்திய பிரமலை கள்ளர் உறவின்முறை நலச்சங்கம், விஜயநகர நாயக்கர் வரலாறு மீட்பு அசோசியேஷன்.
பரங்கிரி நாதர் அறக்கட்டளை, தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கம், தமிழ்நாடு யாதவ மகா சபை, அனைத்து பிள்ளைமார், முதலியார் சங்கம், கள்ளிக்குடி கிழக்கு டி.வேப்பங்குளம் கிராம மக்கள், திருப்பரங்குன்றம் வெள்ளாளர் இளைஞர் முன்னேற்ற சங்கம், பாலாஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் மனுக்களை வழங்கினர்.
மதுரை ஹார்விப்பட்டி ஆன்மிக இறையன்பர்கள் குழு சார்பில், நேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் கோவில் உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, சில அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

