ADDED : ஜன 26, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே மஹாலட்சுமி நகர் முதல் தெருவில் நேற்று இரவு 3 சிறுவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அங்குள்ள காலி இடத்தில் வெடிக்க வைத்தனர்.
பலத்த சத்தம் கேட்டதில் அங்குள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து மூவரும் தப்பி ஓடினர். சிறுவர்கள் விளையாட்டாக செய்தார்களா அல்லது வேறு ஏதும் தொடர்பு உள்ளதா என சி.சி.டி.வி., உதவியுடன் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
