ADDED : பிப் 07, 2025 03:56 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள அரசு மருந்தியல் கல்லுாரியில் மருந்தியல் வாரவிழா நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை வகித்தார். துணை முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.
முதல்வர் பொறுப்பு வெங்கடரத்தினகுமார், உடல் இயங்கியல் துறை இயக்குநர் சரவணன், இணைப்பேராசிரியை உமாராணி, அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ. முரளிதரன் பங்கேற்றனர். டிப்ளமோ, பி.பார்ம், எம்.பார்ம் பார்மசி மாணவர்களுக்கு வினாடிவினா, செஸ் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
