நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பாண்டிகோயில் அருகே துவாரகா மகாலில்தி.மு.க., இலக்கிய அணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு புகைப்பட கண்காட்சி இலக்கிய அணி செயலாளர் கலை ராஜன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர்கள்தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத், பிரசார குழு செயலாளர் செல்வேந்தின், எழுத்தாளர் மதிமாறன் பங்கேற்றனர்.
கண்காட்சியை திறந்து அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார். நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எம்.ஏ.,மாநகராட்சி குழுத் தலைவர் ஜெயராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.