குழாயில் கொப்பளிக்கும் தண்ணீர்: ரோட்டில் வீணாகுது குடிநீர்
குழாயில் கொப்பளிக்கும் தண்ணீர்: ரோட்டில் வீணாகுது குடிநீர்
UPDATED : அக் 05, 2026 12:39 AM
ADDED : அக் 04, 2026 07:15 PM

மேலுார்: திருவாதவூரில் உடைந்த காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் வழியாக விநியோகிக்கப்படும் அசுத்தமான தண்ணீரை பருகும் மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருகிறது.
திருச்சி குளித்தலையில் ஆழ்குழாய் அமைத்து கொண்டு வரப்படும் காவிரி கூட்டுக் குடிநீர் மேலுார் நீரேற்று நிலையத்திற்கு செல்கிறது. இங்கிருந்து திருவாதவூர் நீரேற்று நிலையத்திற்கு செல்லும் குழாயில் நேற்று உடைப்பு ஏற்பட்டு ரோட்டில் தண்ணீர் வீணாகியது. மேலும் கட்டையம்பட்டி, பூஞ்சுத்தி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களுக்கு அசுத்தமான தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: அசுத்தமான தண்ணீரை பருகியதால் தண்ணீர் தொடர்பான தொற்று நோய்க்கு ஆளாகும் நிலை உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால், குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஊராட்சி நிர்வாகம் ரூ 16 விலை கொடுத்து வாங்கும் தண்ணீர் ரோட்டில் வெளியேறுவதால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது. அதிகாரிகள் உடனே குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறுகையில், உடனே தண்ணீர் நிறுத்தப்பட்டு குழாய் உடைப்பு சரி செய்யப்படும் என்றனர்.
