sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பைப் லைனில் சமையல் எரிவாயு வினியோகம் துவக்கம்; மதுரை மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை

/

பைப் லைனில் சமையல் எரிவாயு வினியோகம் துவக்கம்; மதுரை மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை

பைப் லைனில் சமையல் எரிவாயு வினியோகம் துவக்கம்; மதுரை மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை

பைப் லைனில் சமையல் எரிவாயு வினியோகம் துவக்கம்; மதுரை மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை


ADDED : மே 03, 2025 04:32 AM

Google News

ADDED : மே 03, 2025 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் மூலம் சமையல் காஸ் வினியோகிக்கும் பணி துவங்கியும், விழிப்புணர்வு இல்லாததால் போதுமான இணைப்புகள் பெறாமல் மக்கள் உள்ளனர்.

இந்நிறுவனம் மூலம் எல்.பி.ஜி., (லிக்யூட் பெட்ரோலியம் காஸ்) எனும் சமையல் காஸ் சிலிண்டர்கள் வீடுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. தற்போது புதிதாக பி.என்.ஜி., (பைப்ட் நேச்சுரல் காஸ்) எனும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வீடுகளுக்கு அனுப்பும் திட்டம் செயல்படத் துவங்கியுள்ளது.

மாவட்டத்தில் ஓராண்டுக்கு முன் அனுமதித்து 4 மாதங்களாக வீடுகளுக்கே நேரடியாக குழாய் மூலம் சமையல் காஸ் வினியோகித்து வருகின்றனர். இத்திட்டம் தற்போது ஒத்தக்கடை, அவனியாபுரம் பகுதியை மையமாக வைத்து செயல்படத் துவங்கியுள்ளது. ஒத்தக்கடை பகுதியில் இந்த எரிவாயு வினியோகத்திற்கென 'ஹப்' (HUB) ஏற்படுத்தியுள்ளனர். 3 ஆயிரம் பேரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, 1500 வீடுகளுக்கு இணைப்பு குழாய் இணைப்பு வழங்கி, 220 பேர் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல அவனியாபுரம் பகுதியில் 107 பேர் இந்த இணைப்பில் காஸ் வினியோகம் பெறுகின்றனர்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஊழியர்கள் கூறியதாவது: வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது போல, காஸ் வினியோகம் துவங்கியுள்ளது. இந்த இணைப்பு பெற ரூ.6500 டெபாசிட் செலுத்த வேண்டும். மற்றொரு திட்டத்தில் ரூ.3500 டெபாசிட் செலுத்தி, ஓராண்டுக்கு மீதியை இ.எம்.ஐ., மூலம் செலுத்தலாம். அடுத்த ஒரு திட்டத்தில் ரூ.1500 செலுத்தி மீதித்தொகையை 2 ஆண்டுகளுக்கு இ.எம்.ஐ., ஆக செலுத்தவும் வசதி உள்ளது. தற்காலிக, நிரந்தர இணைப்புகளும் பெறலாம். இதற்கான கட்டணத்தை 'மீட்டரில்' 'ரீடிங்' எடுத்து வசூலிப்பர்.

20 சதவீதம் சிக்கனம்


இத்திட்டத்தை செயல்படுத்த ஒத்தக்கடை, அன்புநகர், அம்மாபட்டி, காளிகாப்பான், கருப்பாயூரணி பகுதியிலும், அவனியாபுரத்தில் சந்தோஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இந்த நேச்சுரல் காஸ் எளிதில் ஆவியாகி மேலெழும்பிவிடும்.

தேவைப்படும் நேரத்தில் குழாயை திறந்து பயன்படுத்தலாம் என்பதால் ஆபத்து கிடையாது. 14.5 கிலோ காஸ் சிலிண்டர் ரூ. 950 விலையில் பெற்று அதிகபட்சம் 40 நாட்களுக்கு பயன்படுத்தலாம் என்றால், அதே அளவிலான இந்த காஸ் 55 முதல் 60 நாட்கள் வரை வரும். இதனால் 20 சதவீதம் செலவு மிச்சமாகும். அபார்ட்மென்ட்களுக்கு இது மிகுந்த பலனளிக்கும். மேலும் சிலிண்டரை எடுத்துச் செல்லும் சிரமமும் கிடையாது.

இதுகுறித்து வீடுவீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us