/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் இரண்டு நாட்கள் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள்: 2 இடங்களில் 'ரோடு ஷோ' நடத்த திட்டம்

ADDED : மே 08, 2025 03:31 AM

மதுரை: மதுரையில் ஜூன் 1ல் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் முதல்நாளே வரும் முதல்வர் ஸ்டாலின், இரண்டு இடங்களில் 'ரோடு ஷோ'வில் பங்கேற்க உள்ளார்.
மதுரையில் 1972, 1994ம் ஆண்டுகளில் தி.மு.க., பொதுக் குழுக்கூட்டம் நடந்தது. தற்போது மூன்றாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உத்தங்குடியில் நடக்கவுள்ளது.
தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: மே 31ல் மதுரை வரும் ஸ்டாலின், மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம் பகுதியில் 'ரோடு ஷோ'வில் பங்கேற்கிறார்.
உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா, புதுஜெயில் ரோட்டில் முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
அன்றிரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். மறுநாள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி செய்து வருகிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு இப்போதே அனைத்து ஓட்டல்களிலும் நிர்வாகிகள் 'புக்கிங்' செய்து வருகின்றனர் என்றனர்.