நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் பாத்திமா கல்லுாரி மாணவியர் சார்பில் பனை விதைகள் நடப்பட்டன.
பனை விதை நடவு, சுற்றுசூழல் பாரம்பரியத்தை நோக்கமாக கொண்டு கல்லுாரி ரோஜா கிளப் ஏற்பாடுகளை செய்தது. சி.புதுார், கட்டகுளம், திருவேடகம், அச்சம்பத்து, டி.ஆண்டிப்பட்டி கிராமங்களில் மாணவியருடன் இணைந்து உள்ளூர் மக்களும் பனை விதைகளை நட்டனர். சமூக ஆர்வலர் ரங்கநாதன் ஆயிரம் பனை விதைகளை நன்கொடையாக வழங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் ஆஸ்நெட் மேரி, குழு உறுப்பினர்கள் சாந்தி, பூர்ணிமா, விஜயசாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.