ADDED : செப் 27, 2026 02:33 AM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: மன்னாடிமங்கலத்தில் அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பில் உலக சுற்றுச்சூழல் சுகாதார தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
தலைவர் சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாண்டி, செயலாளர் பாலகுரு முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினரான போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மரக்கன்றுகளை நட்டார்.
நிர்வாகிகள் ஆறுமுகம், கண்ணன், திருப்பதி, போலீசார் செல்லப்பாண்டி, தனபாண்டி, கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
