ADDED : ஆக 08, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் வ.உ.சி. தெருக்கள் மெயின் ரோட்டிலுள்ள கழிவு நீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் நிரம்பி உள்ளது.
திருநகரின் ஒரு பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் விளாச்சேரி மெயின் ரோடு வ.உ.சி. தெருக்கள் பகுதி கால்வாய் வழியாக புளியங்குளம் கண்மாய் செல்கிறது. கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் குப்பை நிரம்பியுள்ளது.
மழை நீருடன் கால்வாயில் வரும் கழிவுநீரும் நிரம்பி குடியிருப்புகளை சூழ்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. அவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கூறினர்.