/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டுக்கு வீரர்கள் முன்பதிவு இன்று துவக்கம்
/
ஜல்லிக்கட்டுக்கு வீரர்கள் முன்பதிவு இன்று துவக்கம்
ஜல்லிக்கட்டுக்கு வீரர்கள் முன்பதிவு இன்று துவக்கம்
ஜல்லிக்கட்டுக்கு வீரர்கள் முன்பதிவு இன்று துவக்கம்
ADDED : ஜன 06, 2025 02:26 AM

மதுரை; மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் முறையே ஜன.14, 15, 16 ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பெயர்களை இன்று (ஜன.6) மாலை 5:00 மணி முதல் ஜன.7, மாலை 5:00 மணி வரை பதிவு செய்ய வேண்டும்.
இதில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் உரிமையாளர்களின் பெயர்களையும் அதே இணையத்தில், அதேநாளில் பதிவு செய்ய வேண்டும். இக்காளைகள் மேற்கண்ட பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும். காளையுடன் ஒரு உரிமையாளர், காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்தவர்களின் சான்றுகளை சரிபார்த்தபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

