ADDED : செப் 11, 2026 04:03 AM
அ நிறம் | அளவு
மதுரை: சிவகங்கையில், ராணி வேலு நாச்சியார் அரண்மனை வளாகத்திலுள்ள மனமகிழ் மன்றத்தை மூட, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை, தீரன் திருமுகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'சிவகங்கையில், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்' என, தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'மனமகிழ் மன்றத்தை உடனடியாக மூட, எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
