ADDED : பிப் 27, 2024 06:38 AM
அ நிறம் | அளவு
மதுரை,: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 300வது மாதாந்திர உழவாரப்பணி நடந்தது.
ஆயிரங்கால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், ஆடி வீதிகள், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி, அம்மன், சுவாமி சன்னதி பிரகாரங்களில் 170 தொண்டர்கள் சுத்தம் செய்தனர். மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல், செயலாளர் ஆதிசேஷன் தலைமை வகித்தனர். ஏற்பாடுகளை பொறுப்பாளர்கள் கஸ்துாரி, முரளிதரன், கமலம், மதுரம், கோபால் செய்தனர். கோயில் சார்பாக குங்குமம், விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
