/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பிளஸ் 2 தேர்ச்சி 0.55 சதவீதம் அதிகரிப்பு: 'ரேங்க்' பட்டியலிலும் முந்தியது மதுரை
/
பிளஸ் 2 தேர்ச்சி 0.55 சதவீதம் அதிகரிப்பு: 'ரேங்க்' பட்டியலிலும் முந்தியது மதுரை
பிளஸ் 2 தேர்ச்சி 0.55 சதவீதம் அதிகரிப்பு: 'ரேங்க்' பட்டியலிலும் முந்தியது மதுரை
பிளஸ் 2 தேர்ச்சி 0.55 சதவீதம் அதிகரிப்பு: 'ரேங்க்' பட்டியலிலும் முந்தியது மதுரை
ADDED : மே 09, 2025 04:10 AM

மாவட்டத்தில் 324 பள்ளிகளை சேர்ந்த 33,742 மாணவர்கள் தேர்வு எழுதி, 32,304 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களை (93.72 சதவீதம்) விட மாணவிகள் (97.60 சதவீதம்) 3.88 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். அரவிந்த மீரா மெட்ரிக் பள்ளி மாணவி லோகப்பிரியா 598 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி மாணவி நிவேதிதா லட்சுமி 597, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி கீர்த்திகா உட்பட 6 பேர் 596 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அரசு பள்ளிகளை சேர்ந்த 4157 மாணவர்களில் 91.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மெட்ரிக் பள்ளிகளில் 99.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
மங்களாம்பட்டி, வில்லுார், உசிலம்பட்டி, களிமங்கலம் என 5 அரசு பள்ளிகள் உட்பட 117 பள்ளிகள் 'சென்டம்' தேர்ச்சி பெற்றன. இதன் மூலம் கடந்தாண்டு 16வது இடத்தில் இருந்த மதுரையின் மாநில ரேங்க், தற்போது 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2184 மாணவர்கள் 'சென்டம்'
தமிழ் 53, ஆங்கிலம் 3, வேளாண் அறிவியல் 474, கம்ப்யூட்டர் சயின்ஸ் 485, கணிதம் 121 உட்பட 2184 மாணவர்கள் 27 பாடப்பிரிவுகளில் 'சென்டம்' பெற்றனர்.
கல்வி அதிகாரிகள் கூறுகையில் முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டோம். அதற்காக தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
சில அரசு பள்ளிகளில் எதிர்பாராதவிதமாக தேர்ச்சி குறைந்துவிட்டது. பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்கள் பலர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்கள் எண்ணிக்கை மாவட்ட தேர்ச்சி சதவீதத்தில் கணக்கில் கொள்ள முடியாது. இதுபோன்ற காரணங்களால் எதிர்பார்த்த தேர்ச்சி கிடைக்கவில்லை என்றனர்.
கல்வி மாவட்டம் அளவில், மதுரை 95.95 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. மேலுார் 95.53 சதவீதம் பெற்று 2ம் இடம் பெற்றுள்ளது.
மாவட்ட அளவிலான தேர்ச்சி முடிவு அறிவிப்பு பணிகளை சி.இ.ஓ., ரேணுகா தலைமையில் டி.இ.ஓ.,க்கள் அசோக்குமார் (மதுரை), சுதாகர் (தனியார் பள்ளி), இந்திரா (மேலுார்) ஆகியோர் கண்காணித்தனர்.