ADDED : மார் 13, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
எழுமலை: எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜா--சாந்தா தம்பதியரது மகன் சமயன், மகள் ஆர்த்தி.
பவுன்ராஜா ஏற்கனவே இறந்து விட்டார். சாந்தா கூலி வேலை செய்து வருகிறார். ஆர்த்தி எழுமலை அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 2 அறிவியல் பாடப் பிரிவில் படித்து வந்தார்.
மூன்று பாடங்களுக்கான தேர்வு எழுதிய நிலையில் இன்று (மார்ச் 13) இயற்பியல் தேர்வு எழுத இருந்தார். இந்நிலையில் நேற்றிரவு 8:00 மணியளவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முதற் கட்ட விசாரணையில் ஆர்த்தி சிறு வயதில் இருந்தே இதயம் தொடர்பாக சிகிச்சை பெற்று வந்ததும், அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் எழுமலை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
