ADDED : ஏப் 10, 2026 11:05 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை அருகே வேடர்புளியங்குளம் அர்ச்சுனன்35. இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரவேல் விசாரித்தார்.
அரசு வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அர்ச்சுனனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
