/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையில் பாதநோய் சிகிச்சை மையம்
/
அரசு மருத்துவமனையில் பாதநோய் சிகிச்சை மையம்
ADDED : மார் 27, 2025 04:54 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக பாதநோய் சிகிச்சை மையத்தை டீன் அருள் சுந்தரேஷ்குமார் துவக்கி வைத்தார்.
டீன் கூறியதாவது:
200வது வார்டில் பாதநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் ஏற்படும் ஆரம்பநிலை குறைபாடுகளை கண்டறியும் புறநரம்பு கோளாறு, ரத்த நாள அடைப்பை கண்டறியும் 'பயோதீசியாமீட்டர்', டாப்ளர், பிற நவீன கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆரம்பநிலை பாத புண்களுக்கான அறுவை சிகிச்சை வசதியும் உள்ளது. கால் மதமதப்பு, காலில் சிறிய புண் உள்ள சர்க்கரை நோயாளிகள் பாதம், கால் இழப்பு பாதிப்பை தவிர்க்கலாம் என்றார்.
கண்காணிப்பாளர் குமரவேல், கல்லுாரி துணை முதல்வர் மல்லிகா, ஆர்.எம்.ஓ., சரவணன், ஏ.ஆர்.எம்.ஓ.,க்கள் முருகுபொற்செல்வி, சுமதி, பொது அறுவை சிகிச்சை துறைத்தலைவர் சரவணன், டாக்டர்கள் கங்காலட்சுமி, கணேசன், ரவிசங்கர், கீதா, திருமலைகண்ணன் கலந்து கொண்டனர்.