ADDED : செப் 06, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையின் மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் தமிழ்க் கவிதை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தமிழ் எங்கள் உயிருக்கு மேல்’ என்ற தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருக்க வேண்டும். வயது வரம்பின்றி தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.
தமிழில் தட்டச்சு செய்தோ, தெளிவாக எழுதியோ maamaduraikavingarperavai@gmail.com என்ற இ மெயில் முகவரி அல்லது 98421 13625 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு செப். 20க்குள் அனுப்ப வேண்டும். தேர்வாகும் வெற்றியாளர், பங்கேற்பாளர்களுக்கு செப். 27ல் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என, தலைமை பொறுப்பாளர் வீர ஆதிசிவத் தென்னவன் தெரிவித்தார்.
