/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வீட்டுக்குள் விஷப் பூச்சிகள் வெளியே தண்ணீர் தேக்கம்
/
வீட்டுக்குள் விஷப் பூச்சிகள் வெளியே தண்ணீர் தேக்கம்
வீட்டுக்குள் விஷப் பூச்சிகள் வெளியே தண்ணீர் தேக்கம்
வீட்டுக்குள் விஷப் பூச்சிகள் வெளியே தண்ணீர் தேக்கம்
ADDED : நவ 02, 2025 03:40 AM

மேலுார்: நாவினிப்பட்டியில் வீடுகளைச் சுற்றி கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கி விஷப்பூச்சிகள் படையெடுப்பதால், மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
நாவினிபட்டி, சீதக்காதி குடியிருப்பு பகுதியில் நுாற்றுக் கணக்கானோர் வசிக்கின்றனர்.
திருப்பத்துார் மெயின் ரோடு உட்பட ஊராட்சியின் பல பகுதிகளில் பெய்யும் மழை நீர் சீதக்காதி குடியிருப்பு பகுதி கால்வாய் வழியாக அருகேயுள்ள குளத்தில் நிரம்பும். சிவன் கோயில் தெப்பக்குள பணியின் போது இக்கால்வாய்க்குள் மணலை குவித்து கால்வாயை அழித்தனர்.
அதனால் தண்ணீர் வெளியேற வழியின்றி மழைநீர், கழிவுநீர் கலந்து வீடுகளுக்கு வெளியே தேங்கிக் கிடக்கிறது.
அப்பகுதி அரிய முத்துபாண்டியன் கூறியதாவது: ஒரு மாதமாக தண்ணீர் தேங்கியுள்ளதால் பாம்பு, விஷபூச்சிகள், வண்டுகள் வீட்டுக்குள் நுழைகின்றன. இதனால் உயிர் பயத்தில் துாக்கத்தையே தொலைத்து விட்டோம்.
சாக்கடை நீரால் துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவ ஆரம்பித்துள்ளது. ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அதிகாரிடம் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை.
மாவட்ட நிர்வாகம் தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஊராட்சி செயலர் இளையராஜா கூறுகையில், உடனே தண்ணீர் வெளியேற்றப்படும் என்றார்.

