/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாகனங்களை துல்லியமாக கண்டறிய 50 கேமராக்கள் போலீஸ் கமிஷனர் தகவல்
/
வாகனங்களை துல்லியமாக கண்டறிய 50 கேமராக்கள் போலீஸ் கமிஷனர் தகவல்
வாகனங்களை துல்லியமாக கண்டறிய 50 கேமராக்கள் போலீஸ் கமிஷனர் தகவல்
வாகனங்களை துல்லியமாக கண்டறிய 50 கேமராக்கள் போலீஸ் கமிஷனர் தகவல்
ADDED : ஜூன் 29, 2025 12:30 AM

மதுரை: மதுரையில் நம்பர் பிளேட் மூலம் வாகனங்களை துல்லியமாக கண்டறியும் அதிநவீன கேமராக்களை கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார்.
'ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடபள் கேமரா' எனும் இத்தகைய அதிநவீன கேமராக்கள் மூலம் வாகனங்கள் எவ்வளவு வேகமாக சென்றாலும் அதன் நம்பர் பிளேட்டை படம் பிடிக்க முடியும். தேசிய தகவல் மையத்துடன் (நிக்) இணைக்கப்பட்டுள்ளதால், படம் பிடித்த நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தின் உரிமையாளரை எளிதில் அடையாளம் கண்டு அபராதம் விதிக்கவும் முடியும். ஓட்டுநரின் முகத்தையும் கூடுமான வரையில் கண்டறிய முடியும். இதில் சேகரிப்படும் தகவல்கள் ஒன்றரை மாதங்கள் வரை சேமிப்பில் வைத்திருக்க முடியும்.
இதுபோன்ற கேமரா காளவாசல் சந்திப்பில் உள்ளது. விலை ரூ.1.5 லட்சம். தற்போது இரு கேமராக்கள் திருப்பரங்குன்றம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை முழுவதும் 50 கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
கமிஷனர் லோகநாதன் கூறியதாவது:
இத்தகைய நவீன கேமராக்கள் மூலம் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க உதவுவதோடு போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க முடியும். திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண் தெரிந்தால் அதை வைத்து கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியை கடந்து சென்றதா என்பதை பார்க்க முடியும். போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆட்டோமேட்டிக் முறையில் அபராதம் விதிக்க முடியும்.
இந்தாண்டுக்கான சாலை பாதுகாப்பு நிதி மூலம் மதுரை முழுவதும் அனைத்து முக்கிய ரோடு சந்திப்புகளில் 2 மாதங்களில் இத்தகைய கேமராக்கள் அமைக்கப்படும். பள்ளி, கல்லுாரிகளில் 'டிராபிக் விங்' மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தால் பஸ்சை நிறுத்தி போலீசாருக்கு தகவலளிக்கும் படி கண்டக்டர், டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் என்றார்.
தெற்கு துணை கமிஷனர் இனிகோ திவ்யன், தெற்குவாசல் உதவி கமிஷனர் சந்திரலேகா, ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் பங்கேற்றனர்.