தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அஜித்குமார் கொலை போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

அஜித்குமார் கொலை போலீசாருக்கு காவல் நீட்டிப்பு

அஜித்குமார் கொலை போலீசாருக்கு காவல் நீட்டிப்பு


ADDED : ஆக 27, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2025 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரிலிருந்த நகை திருடுபோனது. கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27 ல் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர்.

தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் கைதாகினர். சி.பி.ஐ.,போலீசார் விசாரிக்கின்றனர்.

கண்ணன் உட்பட 5 போலீசாரை ஆக.,26 வரை காவலில் வைக்க மதுரை (சி.ஜெ.எம்.,) நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆக.,29 வரை காவல் நீட்டிப்பு செய்து அதே நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி நேற்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us