ADDED : ஏப் 24, 2025 05:45 AM
திருமங்கலம்: மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் 32, இவர் மொட்ட மலைப்பகுதியில் மார்ச் 22 ல் கொலை செய்யப்பட்டார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக கீரைத்துறை ரவுடி வெள்ளைக் காளிக்கு 38, தொடர்புள்ளது தெரிந்தது.
வெள்ளைக்காளியின் தாயார் ஜெயக்கொடி 65, மற்றும் ஆறு பேரை போலீசார் மார்ச் 29 ல் கைது செய்தனர். சுபாஷ் சந்திரபோஸ் என்கவுன்டர் செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான வெள்ளைக்காளி வேறு வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் இருந்தார்.
அவரை இவ்வழக்கிலும் கைது செய்த போலீசார் மீண்டும் ஏப்.23 ல் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அவரை 3 நாள் தங்கள் காவலில் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். நீதிபதி ஒரு நாள் அனுமதித்தார். இதையடுத்து வெள்ளை காளியை போலீசார் அழைத்துச் சென்றனர்.

