ADDED : மார் 20, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : ஏப்.19 தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் திருமங்கலம் சட்டசபை தொகுதியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
போலீஸ் டி.எஸ்.பி., அருள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி லதா அருண் எஸ்.ஐ.,க்கள் பரமசிவம், ஜெயக்குமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், ரிசர்வ் போலீசார் 100க்கும் மேற்பட்டோர் கொடி அணி வகுப்பில் பங்கேற்றனர்.
திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே துவங்கி பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, உசிலம்பட்டி ரோடு வழியாக சென்று சந்தைப்பேட்டையில் முடிவடைந்தது.

