ADDED : பிப் 21, 2025 05:44 AM
பொறியாளர் மீது வழக்கு
மதுரை: கண்ணனேந்தல் மீனாட்சிநகர் பிரின்ஸ் ஆனந்த். வெளிநாட்டில் பணிபுரிகிறார். மனைவி சஹானா, இரு குழந்தைகளுடன் மதுரையில் வசிக்கிறார். கண்ணனேந்தல் ஜி.ஆர். நகரில் ரூ.88.32 லட்சத்திற்கு வீடு கட்ட பொறியாளர் ஸ்ரீகாந்துடன் ஒப்பந்தம் செய்தனர். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டித்தராமல் காலம் தாழ்த்தியதால் திருப்பாலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மற்றொரு பொறியாளர் மூலம் கட்டுமானம் பணி நடக்கிறது. ஆத்திரமுற்ற ஸ்ரீகாந்த், பணியிடத்திற்கு சென்று வேலையாட்களை மிரட்டி, பணிகளை நிறுத்தினார். சஹானாவுக்கும் மிரட்டல் விடுத்தார். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
----போக்சோவில் கைது
வாடிப்பட்டி: தாதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் தவசி 57, டிரைசைக்கிள் வைத்துள்ளார். மனநலம் பாதித்த 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசார் தவசியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
காட்டு மாடு பலி
கொட்டாம்பட்டி: குமுட்ராம்பட்டி மலையில் இருந்து நேற்று அதிகாலை உணவு தேடி வந்த பெண் காட்டு மாடு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றது. அப்போது வாகனம் ஒன்று மோதி இறந்தது. வனக்காப்பாளர் கருப்பசாமி தலைமையில் சேக்கிபட்டி கால்நடை டாக்டர் மூலம் உடல் பரிசோதனை செய்து மலைப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

