மாடு திருடர்கள் கைது
மேலுார்: நல்லசுக்காம்பட்டி விவசாயி சதாசிவம் 73. நேற்று முன்தினம் வீட்டின் முன் பகுதியில் கட்டி இருந்த இரண்டு கர்ப்பமான மாடுகள் காணாமல் போயின. உறவினர்களுடன் தேடிய போது மணப்பாறை சந்தையில் மினிவேனில் மாடுகளை சிலர் இறக்கி கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது மாங்குளப்பட்டி மூர்த்தி 25, மழுவேந்தி 22, மணப்பட்டி மினிவேன் டிரைவர் விஜி 28, மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் மாட்டை திருடியது தெரிந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
7 பேர் கைது
அவனியாபுரம்: வைக்கம் பெரியார் நகர் சாலையில் அவனியாபுரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த மதுரை வடக்குமாசி வீதி குமாரிடம் விசாரித்தனர். பெரியார் நகர் மச்ச சிவா தரப்பிற்கும் தனக்கும் முன்பகை இருப்பதாகவும், மச்சசிவாவும், அவரது நண்பர்களான ரஞ்சித், முத்துப்பாண்டி மூலம் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதால் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டு, செலவிற்காக வைக்கம் பெரியார்நகர் பாலமுருகன் 21, அருண்குமார் 24, ஆரோக்கிய விஜய் 20, ஆகாஷ் 19, அசோக்குமார் 23, முகம்மது அசன் 24 ஆகியோருடன் சேர்ந்து பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார். 7 பேரையும் கைது செய்து, 6 பட்டாகத்திகளை பறிமுதல் செய்தனர்.