நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிராக்டர் திருட்டு
பேரையூர்: ஏ.பாரைப்பட்டி கோபாலகிருஷ்ணன் 24. டிராக்டர் வைத்து உழவு செய்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு வீட்டருகே டிராக்டரை நிறுத்தி வைத்திருந்தார். மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
உடலை தானம் செய்தவர் தற்கொலை
திருமங்கலம்: நாகமலை புதுக்கோட்டை பாண்டியராஜன் 34. செக்கானுாரணியில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் போலீஸ் நண்பர்கள் குழுவில் இணைந்து போக்குவரத்து சீரமைத்தல், சமூகப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்தானம் செய்ய விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்தார். நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியை பிரிந்து வாழ்ந்தவர், மறுமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.