சர்ச் விவகாரம்: வழக்குப்பதிவு
மதுரை: கீழவாசல் சி.எஸ்.ஐ., சர்ச் நிர்வாக பிரச்னை காரணமாக நவ.3ல் பிரார்த்தனையின்போது இருதரப்பினர்கைகலப்பில் ஈடுபட்டனர்.போதகர் ராஜா ஸ்டாலின் தரப்புபுகாரில் 3 பேர் மீது விளக்குத்துாண் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.முன்னாள் பொருளாளர்துரைசிங்புகாரில் வண்டியூர் ஆபிரஹாம், செரின் சாந்தசுதன், வில்லியம்ராஜன், சாலமன்ராஜ், அபேத்மனோகர், திலீப்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடனால் தற்கொலை
மதுரை: மேலப்பனங்காடி கருப்பையாபுரம் கார்த்திக் 32. தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர் வீடு ஒன்றை விலைக்கு வாங்க ரூ.6 லட்சம் கடன் பெற்றார். ஆவணங்களின்றி வீடு கார்த்திக் பெயரில் மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த கடனை அடைக்க பெற்றோர் வீட்டை அடகு வைத்து கடன் வாங்க முயற்சித்தார். அதுவும் கால தாமதத்தால் மனவிரக்தியில் கார்த்திக் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
780 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்
மதுரை: அழகப்பன் நகர் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். பைகாரா சந்தோஷ்குமார் 28, காபி கடையில் இருந்து 780 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
கொலையானவர் கொத்தனார்
சத்திரப்பட்டி: லட்சுமிபுரத்தில் நேற்றுமுன்தினம் கழுத்து அறுபட்ட நிலையில் 35 வயதுள்ள நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பழனி எனத்தெரிந்தது. மதுரை சூர்யா நகர் பகுதியில் கொத்தனராக இருந்துள்ளார். மனைவி, மகன், மகள் உள்ளனர். உடல் அருகே இருந்த டூவீலர் பதிவெண்ணை கொண்டும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் கொலை செய்யப்பட்டது பழனி என தெரியவந்தது. காரணம் குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்றவர்கள் கைது
பேரையூர்: வி.ராமசாமிபுரம் விஜயகுமார் 30, ராஜகுரு 37. இருவரும் அதே ஊரில் பெட்டிக்கடை நடத்துகின்றனர். கடை அருகே டூவீலரில் மது விற்றனர். இருவரையும் எஸ்.ஐ., சத்தியவேந்தன் கைது செய்து 35 மது பாட்டில்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தார்.
திருமங்கலம்: காளப்பன்பட்டியில் மதியழகன் 55, வீட்டில் விற்பனைக்காக பதுக்கப்பட்டிருந்த 50 மது பாட்டில்கள், உசிலம்பட்டி தாலுகா மாயகரும்பன்பட்டி மொக்கராஜ் 62, வீட்டில் 26 மது பாட்டில்கள், உசிலம்பட்டி தாலுகா சீரங்கம்பட்டி கருத்தபாண்டி 29, வீட்டில் 50 மது பாட்டில்கள், உசிலம்பட்டி தாலுகா மடகாசம்பட்டி யோகிராஜ் 52, வீட்டில் 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பேட்டரி திருடியவர் கைது
அலங்காநல்லுார்: பொதும்பு, கோவில்பாப்பாகுடி பகுதிகளில் வேன், லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் தொடர்ந்து பேட்டரி திருடு போனது. அலங்காநல்லுார் போலீசார் விசாரித்தனர். பேட்டரி திருடிய அருப்புக்கோட்டை திருச்சுழி ஜெயா நகர் நாகராஜை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 பேட்டரி, டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டன.