நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகை திருடிய இருவர் கைது
பேரையூர்: எஸ்.தொட்டணம்பட்டி பெத்தணன் மகன் அயோத்திராமன் 32. இவரிடம் எஸ்.கோட்டைப்பட்டி முத்தீஸ்வரன் 30, ஆடு மேய்க்கும் வேலை பார்க்கிறார். நேற்று முன்தினம் அயோத்திராமன் வீட்டில் இல்லாத நேரத்தில் முத்தீஸ்வரன், இவரது நண்பர் சேடப்பட்டி தங்கபாண்டி 22, ஆகிய இருவரும் சேர்ந்து பீரோவில் இருந்த 1.5 பவுன் நகையை திருடிச் சென்றனர். சாப்டூர் போலீசார் இருவரையும் கைது செய்து நகையை மீட்டனர்.
கத்தியுடன் வாலிபர் கைது
பேரையூர்: கிழக்குத் தெரு ஜெய்சங்கர் மகன் வினோத்பாண்டி 26. இவர் நேற்று பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தியபடி கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற எஸ்.ஐ., ராஜு அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.