
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: ராஜபாளையம் செவல்பட்டி விக்னேஷ் பாண்டி 22, சிவகங்கை தனியார் சட்டக் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவர். அதேபகுதி யுவராஜ் 19, ஸ்ரீவில்லிபுத்துார் கல்லுாரி 2ம் ஆண்டு மாணவர். ஜன.7ல் இருவரும் டூவீலரில் கோயம்புத்துார் சென்றனர்.
விக்னேஷ் பாண்டி ஓட்டினார். சமயநல்லுார் நான்குவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்ற வேனின் பின்னால் மோதி விழுந்ததில் காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யுவராஜ் நேற்று முன்தினமும், விக்னேஷ் பாண்டி நேற்றும் இறந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

