ADDED : மார் 17, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*செயின் பறிப்பு: தம்பதி கைது
மேலூர் : மேலூர் ஸ்டார் நகர் மாணிக்கம். மார்ச் 10 நடை பயிற்சிக்காக வெளியே சென்றார். வீட்டிற்குள் நுழைந்த திருடன் அவரது மனைவி சாய் லட்சுமியை 60, கத்தியால் குத்தி விட்டு எட்டு பவுன் தாலி செயினை பறித்து தப்பினார். டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையில் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான அப்பகுதி கொத்தனார் கார்த்திபனை 45, கைது செய்தனர். விசாரணையில் மலம்பட்டியில் புதிதாக கட்டும் வீட்டை கட்ட பணம் இல்லாததால் செயினை பறித்தது தெரிய வந்தது. மேலூர் போலீசார் செயின் பறித்த கார்த்தீபன் மற்றும் நகையை பதுக்கி வைத்திருந்த அவரது மனைவி சங்கீதாவை 40, கைது செய்தனர்.