sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் செய்திகள்... மதுரை

/

போலீஸ் செய்திகள்... மதுரை

போலீஸ் செய்திகள்... மதுரை

போலீஸ் செய்திகள்... மதுரை


ADDED : ஆக 05, 2025 05:16 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிரைவர் வெட்டிக் கொலை

மதுரை: மேலகள்ளந்திரியை சேர்ந்தவர் கண்ணன் மகன் செல்லப்பாண்டி 24. ஆட்டோ டிரைவர். சொந்தமாக ஆட்டோ வாங்க ஒருவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில், இருவருக்கும் பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்தபோது, செல்லப்பாண்டியை ஒருவர் அலைபேசியில் அழைத்து அழகர்கோவில் மெயின் ரோடு பகுதிக்கு வரச் செய்தார். அங்கு தயாராக இருந்த 3 பேர் செல்லபாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். மருத்துவமனையில் இருந்த அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். அப்பன்திருப்பதி போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடுகின்றனர்.---

* கமிஷனரிடம்காங்., புகார்

மதுரை: நகர் காங்., தலைவர் கார்த்திகேயன் போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகார்: என் மீது புதுார் வீரவாஞ்சிநாதன் வாட்ஸ்ஆப், பேஸ்புக் ஆகியவற்றில் அவதுாறு கருத்துக்களை முன்வைத்து, நான் அவரை கொலை செய்ய முயற்சிப்பதாக முகாந்திரம் இல்லாத செய்திகளை பரப்புகிறார். அவரது நடவடிக்கையால் மனரீதியாக பாதிக்கப்படுகிறேன். ரூ.25 லட்சம் கொடுத்தால் அவதுாறு செய்ய மாட்டேன் என மிரட்டுகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

* விரலை

வெட்டியவர் கைது

திருமங்கலம்: பொன்னமங்கலத்தைச் சேர்ந்த தொழிலாளி சுரேஷ் 41, இவரது நண்பர் தொட்டியபட்டி ஜெயபாண்டி 42, இருவரும் நேற்று திருமங்கலம் தெற்கு தெரு டாஸ்மார்க் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த தொட்டியபட்டி கணபதி 45, ஜெயபாண்டியிடம் பணம் கேட்டார். அவர் மறுக்கவே மிரட்டினார். அருகில் இருந்த சுரேஷ் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கணபதி கத்தியால் சுரேஷின் கைவிரலை வெட்டிவிட்டு தப்பினார். அருகில் இருந்தவர்கள் சுரேஷை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கணபதியை கைது செய்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

----

* டிரைவர் தற்கொலை

பேரையூர்: எம்.புளியங்குளம் பெருமாள் மகன் சக்திவேல் 24. வேன் டிரைவர். இவர் ஆடி 18 ல் எனக்கு டூவீலர் எடுத்து தர வேண்டும் என்று பெற்றோரிடம் வற்புறுத்தி உள்ளார். கொஞ்ச நாள் போகட்டும் என பெற்றோர் கூறினர். நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார். உடனே தனது மூத்த சகோதரருக்கு வாட்ஸ் ஆப்பில் 'சாரிடா, மிஸ் யூ டா' என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்தார். வில்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

----

* நாய்கள் துரத்திய

புள்ளிமான் மீட்பு

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா கரிசல்பட்டி, ராயபாளையம், சிவரக்கோட்டை, பச்சக்கோப்பன்பட்டி, நேசனேரி, பொன்னமங்கலம், சித்தாலை கிராம கண்மாய்களில் ஏராளமான காட்டுப்பன்றி, புள்ளிமான்கள் உள்பட வனவிலங்குகள் வசிக்கின்றன. அவ்வப்போது மான்கள், பன்றிகள் உணவைத்தேடி கிராமங்களுக்குள் வந்து விடும். அவை 4 வழிச்சாலையை கடக்க முயல்கையில் விபத்தில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கை. கிராமங்களில் திரியும் நாய்கள் கடிப்பதாலும் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நேற்று பச்சக்கோப்பன்பட்டியில் உணவு தேடி மூன்று வயதுள்ள பெண் மான் கிராமத்திற்குள் வந்தது. அதைப் பார்த்த நாய்கள் விரட்டின. பொதுமக்கள் நாய்களை விரட்டி மானை மீட்டனர். திரளி வி.ஏ.ஓ., ராஜாமணி தகவலையடுத்து சாப்டூர் வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர். இதுபோன்ற விலங்குகளுக்காக கண்மாய் பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

----

* பஸ் மோதி------------------- (படம் உண்டு)

பெண் பலி

சோழவந்தான்: பசும்பொன் நகரை சேர்ந்த காந்தி மனைவி உஷாராணி 55, நாச்சிகுளம் செல்வதற்காக கணவரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து பஸ்ஸ்டாப் சென்றார். அவ்வழியே வத்தலகுண்டு சென்ற அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். கணவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். போலீசார் விசாரிக்கின்றனர்.

--

* ராணுவ வீரர்

தற்கொலை

எழுமலை: சங்கரலிங்காபுரம் முனியாண்டி 35. கடந்த 2010ல் ராணுவத்தில் சேர்ந்து தற்போது நாசிக் பகுதியில் பணிபுரிகிறார். திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஜூன் 3 ல், ஒன்றரை மாத விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். குடும்பத்தினர்களுக்கிடையே சொத்து பிரிப்பது தொடர்பாக மனவருத்தத்தில் இருந்தார். விரக்தியில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டி.ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

-----

* கொத்தனார்

கைது துண்டானது

வாடிப்பட்டி: பரவை கம்பன் தெரு கொத்தனார் முருகன் 38, நேற்று முன் தினம் இரவு பரவை ரயில்வே கேட், அண்டர் பாஸ் பாலம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி சென்ற ரயில் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். இதில் முருகனின் வலது கை துண்டானது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்த விபத்தால் ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மதுரை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

----






      Dinamalar
      Follow us