sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 போலீஸ் செய்திகள்...: மதுரை

/

 போலீஸ் செய்திகள்...: மதுரை

 போலீஸ் செய்திகள்...: மதுரை

 போலீஸ் செய்திகள்...: மதுரை


ADDED : ஜன 25, 2026 05:31 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாரி மோதி வாலிபர் பலி -- வாடிப்பட்டி: சமயநல்லுார் பாத்திமா நகர் பாண்டி மகன் முருகவேல் 25. மதுரையில் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். நேற்று காலை வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார். சமயநல்லுார் ரயில்வே பாலம் தேனுார் ரோட்டில் பாத்திமா நகர் பிரிவில் திரும்பிய போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் முருகவேல் இறந்தார். சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், எஸ்.ஐ.,ராஜா முகமது விசாரிக்கின்றனர்.

யு டியூபருக்கு வெட்டு: இருவர் கைது மேலுார்: பட்டூர் அஜித்குமார் 24, யுடியூபர். சென்னகரம்பட்டி பிரேம்குமார் 29. வீடியோக்களை வலைதளத்தில் பதிவிடுவது தொடர்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை அஜித்குமார் மேலுாரில் டாட்டூ வரையும் கடையில் இருந்தபோது அங்கு வந்த பிரேம்குமார், அவரது நண்பர் கருத்தபுளியம்பட்டி மகேந்திரன் 29, தகராறு செய்து கத்தியால் வெட்டினர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ரயில் மோதி மூதாட்டி பலி உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனுார் காத்தம்மாள் 70. நேற்றுகாலை கோட்டைக்கல் சிவன் கோயில் அருகே தென்னை ஓலைகளை சேகரித்துக் கொண்டு மதுரை -- போடி ரயில் பாதையை கடந்தபோது ரயில் மோதி பலியானார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us