ADDED : மார் 07, 2026 05:13 AM
* போலீஸ் கமிஷனர் பாராட்டு
மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செக் குடியரசு நாட்டை சேர்ந்த பாவெல் நோவல், அவரது மனைவி நேற்று தரிசனம் செய்ய வந்தனர். அவர்களின் பாஸ்போர்ட்டை தவறவிட்டனர். கோயில் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இந்நிலையில் வடக்கு ஆவணி மூலவீதியில் உள்ள டீக்கடை நடத்தும் குமாரசாமி, கீழே கிடந்த பாஸ்போர்ட்டை எடுத்து போலீசில் ஒப்படைத்தார். அதை பாவெல் நோவலிடம் போலீசார் ஒப்படைத்தனர். குமாரசாமியின் செயலை போலீஸ் கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.
-* சிறுவன் பலி
உசிலம்பட்டி: குன்னுாத்துப்பட்டி அழகுமுத்து 30, கார்த்திகா 26 தம்பதியர். இவர்களது மகன் ஆதித்யா 3. கிராமத்தில் வீட்டின் மாடியில் அழகுமுத்துவின் பெற்றோரும் கீழ்த்தளத்தில் தம்பதியரும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆதித்யா வீட்டின் மாடியில் உள்ள தடுப்பு கம்பிகளின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென தவறி கீழே விழுந்தார். மருத்துவமனையில் சேர்த்தும் பலனின்றி உயிரிழந்தார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

