நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டலில் ரகளை: 5 பேர் கைது
மதுரை: சிந்தாமணி கணேசமூர்த்தி 33, கருப்பாயூரணி ராமன் 36, முதுகுளத்துார் சுரேஷ் கார்த்தி 30, புதுார் ராஜ்குமார் 33, எல்லீஸ்நகர் ராம்குமார் 33. இவர்கள் டி.பி. ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்க அறை கேட்டனர். அறை காலி இல்லை என தெரிவித்ததால் ஆத்திரமுற்று அங்கு நின்றிருந்த செல்லுார் செல்வத்திடம் தகராறு செய்து தாக்கியதாக எஸ்.எஸ். காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திறந்திருந்த கதவால் திருட்டு
கொட்டாம்பட்டி: பூதமங்கலம் சிவக்குமார் 45. கருங்காலக்குடியில் பேக்கரி கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் காற்றுக்காக கடை கதவை திறந்து வைத்து துாங்கினார். அதிகாலை எழுந்து பார்த்த போது பணப்பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம், அலைபேசி, டூவீலர் திருடப்பட்டிருந்தது. எஸ்.ஐ., அண்ணாத்துரை விசாரிக்கிறார்.